புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக, பொது மக்கள் மோடி ஆப்பில் கருத்தை தெரிவிக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மக்களுக்கு அழைப்பு:
கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதனால் பார்லிமென்டை முடக்கி வைத்துள்ளன. இந்நிலையில், இநு்த நடவடிக்கை குறித்து பொது மக்களின் கருத்துக்களை பிரதமர் கோரியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பிரதமர் வெளியிட்ட செய்தியில், ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கை குறித்து பொது மக்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நமோ ஆப்பில் மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் எனக்கூறியுள்ளார்.
ஆப்பில் இடம்பெற்றுள்ள கேள்விகள்:
01. இந்தியாவில் கறுப்பு பணம் உள்ளது என நினைக்கிறீர்களா?
02. ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக போராடி அதனை ஒழிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?
03. கறுப்பு பணம் குறித்த மத்திய அரசின் நடவடிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
04. ஊழலுக்கு எதிராக மோடி அரசின் முயற்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
05. ரூ.500 மற்றும் ரூ.1000 வாபஸ் என்ற மோடி அரசின் நடவடிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
06. ரூபாய் நோட்டு வாபஸ் பெற்றது மூலம், கறுப்பு பணம், பயங்கரவாதம், ஊழல் ஒழிக்கப்படும் என நினைக்கிறீர்களா?
07. ரூபாய் நோட்டு வாபஸ் மூலம், ரியல் எஸ்டேட், உயர் கல்வி சுகாதாரம் சாமான்ய மக்களுக்கு கிடைக்கும் என எண்ணுகிறீர்களா?
08. ஊழல், கறுப்பு பணம், பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் சிரமங்கள் எதையும் எதிர்கொண்டீர்களா?
09. ஊழல் எதிர்ப்பு வாதிகள் சிலர் கறுப்பு பணம், ஊழலுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறார்கள் என எண்ணுகிறீர்களா?
10. பிரதமர் மோடியிடம் பகிர்ந்து கொள்வதற்கு ஆலோசனைகள், யோசனைகள், முடிவுகள் ஏதேனும் உள்ளதா?
என்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
மோடி ஆப்பை பதிவறக்கம் செய்வதற்கான முகவரி: nm4.in/dnldapp
Comments
Post a Comment