முழு வீச்சில் ரூபாய் அச்சடிப்பு பணி: ரிசர்வ் வங்கி ‌தகவல்


புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதனால் தேவையான அளவு ரூபாய் நோட்டுகள் கிடைப்பது உறுதியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டி‌ல் 4 ஆயிரம் இடங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் கை‌யிருப்பில் உ‌ள்ளதாகவும் வங்கிகளின் தேவைக்கேற்ப அவை அனு‌ப்பப்பட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது‌. புதிய நோட்டுகளை ஏடிஎம் இயந்திரத்தில் வைப்பதற்கேற்ற வகையில் அவற்றில் மாற்றங்கள் வேகமாக செய்யப்பட்டு வருவதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. வங்கிகளின் சுமையை குறைப்பதற்காக மக்கள் இயன்றவரை ஏடிஎம் கா‌ர்டு,‌ கிரெடி‌ட் கார்டு, மொபைல் பேங்கிங்‌ உள்ளிட்ட வழிகளில் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Comments