தற்கொலைகளை தடுக்க சின்னத்திரை நடிகர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் என சின்னத்திரை சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சினிமா மற்றும் தொலைக் காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமான சபர்ணா சிலநாட்களுக்கு முன்பு மதுரவாயல் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சபர்ணா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது பற்றி மதுரவாயல் போலீ ஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சின்னத்திரை நடிகர் சங்கம் 11வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தலைவர் G.சிவன் ஸ்ரீநிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண், துணைத்தலைவர்கள் P.K.கமலேஷ், சோனியா போஸ் வெங்கட் உள்ளிட்ட பல சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இப்பொதுக்குழுவில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இப்பொதுக்குழு முடிவில் " சின்னத்திரை நடிகர்கள் தற்கொலைகள் தடுக்கப்பட மனநல ஆலோசனை, கட்டிடம் கட்ட உடனடி ஆவணமும், பணம் திரட்டும் முயற்சியும் வேகமாக மேற்கொள்ளப்படும் மற்றும் மொழிமாற்று தொலைக்காட்சி தொடர்கள் தடுப்பு மற்றும் வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் போன்றவைகளுக்கு உடனடியாக ஆவணம் செய்யப்படும்" ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments
Post a Comment