சமந்தா சொன்ன அனிருத் காதலி யார்? ரசிகர்கள் குழப்பம்

சமந்தா சொன்ன அனிருத் காதலி யார்? ரசிகர்கள் குழப்பம்


பீப் பாடல் விவகாரம், ஆண்ட்ரியாவுடன் லிப் டு லிப் முத்த போட்டோ லீக் போன்ற சர்ச்சைகளுக்கு பிறகு அனிருத் மீண்டும் சர்ச்சைகளில் சிக்காத வண்ணம் தனது செயல் பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறார். பொது நிகழ்ச்சிகளில் தோன்றினாலும் வில்லங்கமான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நழுவிச் செல்கிறார். அனிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக சில நாட்களுக்கு முன் தகவல் பரவியது.

இதையடுத்து அவருக்கு பலர் வாழ்த்து கூறினார்கள். ஆனால், தனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை, தான் சிங்கிளாக இருப்பதாக இணைய தளத்தில் பதில் அளித்திருந்தார். அனிருத்தின் பதிலை கண்ட நடிகை சமந்தா உடனடியாக அவருக்கு ஒரு கேள்வி எழுப்பி மெசேஜ் அனுப்பினார்.

‘ஆனால் அந்தப் பெண் ரொம்ப இனிமையானவள் ஆயிற்றே. உங்களுக்குள் என்ன நடந்தது?’ என்று கேட்டிருந்தார். சமந்தா குறிப்பிட்டது எந்த பெண்ணை என அனிருத் நட்பு வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள அனிருத், ‘ஹ..ஹ..ஹ.. சமந்தா’ என சிரித்து மழுப்பியதுடன் அத்துடன் அந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து எஸ்கேப் ஆகிவிட்டா
ர்

Comments