பேஸ்புக் மோகம்: போட்டோ எடுத்துவிட்டு நோட்டு எடுக்கப் போனவர் கைது


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில், பேஸ்புக் மோகத்தால், குப்பை தொட்டியில் 500 ரூபாய் நோட்டுகளை வீசிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மதுராந்தகத்தை சேர்ந்தவர் சாந்தகுமார்; ஆட்டோ டிரைவர். 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்ற பிறகு, பேஸ்புக்கில், சாந்தகுமார் தீவிரமாக கருத்து்க்களை வெளியிட்டு வந்தார். அத்துடன் 500 ரூபாய் நோட்டுகளை குப்பை தொட்டியில் வீசி அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டால் அதிக,‛லைக்'குகள் கிடைக்கும் என கருதினார். நேற்று நகராட்சி குப்பை தொட்டியில், 8,000 ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை குப்பை தொட்டியில் வீசினார். படம் எடுத்துவிட்டு, அப்பணத்தை மீண்டும எடுக்க செல்லும் போது போலீசாரிடம் சிக்கினார். இந்த விவகாரம் மதுராந்தகம் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments