'யூடியூப் கிட்' பற்றி கேள்விப்பட்டீர்களா?

யூடியூப் நிறுவனம், இந்தியாவில் 'யூடியூப் கிட்' என்ற ஆப்-ஐ வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே 20 நாடுகளில் இந்த ஆப்-ஐ வெளியிட்டுள்ள யூடியூப் இந்தியாவிலும் வெளியிட்டு இருக்கிறது. 

இந்த ஆப்-பின் சிறப்பம்சம், யூடியூப் வீடியோ வலைதளத்தில் வீடியோக்களை தேட சிரமப்படும் சிறுவர்கள், இதில் இருக்கும் பெரிய எழுத்துகள், வாய்ஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளால் சுலபமாக  வீடியோக்களை தேட முடியும். பெற்றோர்களும், தங்கள் குழந்தை எந்த மாதிரி வீடியோக்களை எல்லாம் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறார்களோ, அவைகளை 'லாக்' செய்து வைக்கும் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது பற்றி யூடியூப் நிறுவனம், 'இந்த ஆப் சரியான நேரத்தில் தான் வந்திருக்கிறது. பல லட்சம் இந்திய குழந்தைகளின் அறிவை வளர்க்கவும், மெருகேற்றவும் இந்த ஆப் உதவும்' என்று கூறியுள்ளது.

Comments