மந்திரவாதியின் பிடியில் நடிகை பாபிலோனா சிக்கியிருப்பதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் மீட்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் 80 வயது பாட்டி கிருஷ்ணகுமாரி. சென்னை சாலிக்கிராமத்தில் வசிக்கிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் நடிகை பாபிலோனாவின் பாட்டி. பாபிலோனாவை நான் தான் வளர்த்தேன். அவரை திரைஉலகத்தில் அறிமுகப்படுத்தி பிரபல நடிகையாக வளர்த்துவிட்டதும் நான் தான்.
எனது பேத்தி பாபிலோனா தற்போது மந்திரவாதி ஒருவரின் பிடியில் சிக்கியுள்ளார். வசியக்கலை மூலம் எனது பேத்தியை வசியப்படுத்தி, அந்த மந்திரவாதி தனது பிடியில் வைத்துள்ளார். எனது பேத்தியின் நகைகள் மற்றும் பணம் அனைத்தையும் அவர் அபகரித்து விட்டார்.
பாபிலோனாவை சிறைவைத்துள்ள மந்திரவாதி பல்வேறு குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிகிறது. எனவே பாபிலோனாவை குறிப்பிட்ட மந்திரவாதியிடம் இருந்து பத்திரமாக மீட்கவேண்டும். மந்திரவாதி மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது
Comments
Post a Comment