வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகள் இன்று முதல் தளர்த்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, வரம்பிற்கு கூடுதலாக பணம் எடுக்க அனுமதிக்கலாம் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக இன்று முதல் வங்கிகளில் எடுக்கும் பணத்தை, 500, 2000 ரூபாய் நோட்டுகளாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவையை பரிசீலித்து பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டால், பணம் டெபாசிட் செய்ய ஏற்படும் தயக்கத்தைப் போக்க இந்த நடவடிக்கை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
Comments
Post a Comment