அதிபர் ஆவாரா ட்ரம்ப்? அமெரிக்காவில் மறுவாக்கு எண்ணிக்கை!

அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார். அதே வேலையில், ட்ரம்ப் குறைந்த அளவு வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதையடுத்து, அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த அந்நாட்டு தேர்தல் கமிஷன் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில், க்ரீன் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜில் ஸ்டெய்ன் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென்று கோரி இருந்தார். இந்நிலையில், விஸ்கான்சின் மாகாணத்தில் சில தினங்களில் அதிகாரப்பூர்வ மறுவாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. 

விஸ்கான்சின், மிச்சிகன், பென்சில்வேனியா ஆகிய மூன்று மாகாணங்களிலும் ட்ரம்ப் சில ஆயிரம் ஒட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். இந்த மூன்று மாகாணங்களிலும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தினால் கூட ட்ரம்ப் வெற்றி பெற்றது மாறும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்று தான் பரவலாகக் கூறப்படுகிறது.

இந்த மறுவாக்கு எண்ணிக்கை அறிவிப்பு குறித்து ஹிலரி கிளின்டன் தரப்பு இது வரை எதுவும தெரிவிக்கவில்லை

Comments