பொதுமக்கள் பதற்றப்பட்ட வேண் டாம். வங்கிகளிடம் போதுமான தொகை இருக்கிறது. பதற்றம் காரணமாக அடிக்கடி வங்கி கிளை மற்றும் ஏடிஎம்களுக்கு சென்று பணத்தை எடுத்து சேமிக்க தேவையில்லை என ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்திருக்கிறது.
சிறிய ரூபாய் மதிப்பு தாள்கள் ரிசர்வ் வங்கி மற்றும் வங்கி களிடம் போதுமான அளவுக்கு இருக்கிறது. மக்களுக்கு தேவைப் படும் போது பணம் இருக்கும். பதற்றப்பட்டு, அடிக்கடி கிளை கள் மற்றும் ஏடிஎம்களுக்கு செல்ல வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் தெரிவித் திருக்கிறது.
நாட்டின் சில பகுதிகளில் இன்று வங்கி விடுமுறை என்பதால் நேற்று காலை முதலே கிளைகள் மற்றும் ஏடிஎம்களில் கூட்டம் இருந்து. ஏடிஎம்களில் பணம் நிரப்பப்பட்டாலும் உடனடியாக தீர்ந்துவிடுகிறது என்பதால் மக்கள் விரக்தி அடைந்தனர்
Comments
Post a Comment