இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமைச்சருக்கு இணையான பதவி கொடுத்த ட்ரம்ப்...!

ட்ரம்ப்
ந்திய வம்சாவளி பெண்ணான நிக்கி ஹாலே-வை ஐ.நா சபையின் அமெரிக்கத் தூதராக நியமித்து கெளரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டொனால்டு ட்ரம்ப்.  ஐ.நா சபையின் அமெரிக்க தூதர் பதவி அமெரிக்க அமைச்சருக்கு இணையான பதவியாகும். அமெரிக்க அரசு நிர்வாகத்தில் கேபினட் அந்தஸ்துடன் கூடிய பதவியை இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண் வகிக்க இருப்பது இதுவே முதல்முறை. இத்தகையை வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமை நிக்கி ஹாலே-க்கு கிடைத்துள்ளது.
நிக்கி ஹாலேவின் பெற்றோர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள். அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்ற  பின்னர், நிர்வாகப் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் இவர். கடந்த 2011-ம் ஆண்டு முதல் தெற்கு கலிபோர்னியாவின் ஆளுநராக பணியாற்றி வருகிறார். தெற்கு கலிபோர்னியாவின் முதல் பெண் கவர்னர், அமெரிக்காவின் மிகவும் வயது குறைவான கவர்னர் என பல பெருமைகளை நிக்கி பெற்றுள்ளார்.
'ஆளுநர் நிக்கி ஹாலே, மாகாணத்தின் நன்மைக்காகவும், அமெரிக்காவின் முன்னேற்றத்திற்காகவும், முக்கியமான பல கொள்கைகளை எடுத்து, மக்களை வழி நடத்தியுள்ளர்'' என நிக்கியை டிரம்ப் பாராட்டியுள்ளார். 
அதிபர் தேர்தலின்போது ட்ரம்ப்-ஐ கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்த நிக்கி ஹாலேதற்போது கூறுகையில்,''நான் இரண்டு காரணங்களுக்காக இந்த புதிய பதவியை ஏற்றுக் கொள்கிறேன். முதலில் இந்த பதவிக்கு நான் கடமை உணர்வுடன் இருப்பேன். நாட்டிற்கு நல்லது செய்ய என்னால் முக்கிய பங்களிப்பை ஆற்ற முடியும் என அதிபராக பொறுப்பேற்கவுள்ள ட்ரம்ப் நம்புகிறார். இரண்டாவது, கடந்த ஆறு ஆண்டுகளக கவர்னராக பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது.
இந்த அனுபவம் எனக்கு வலுவான அரசியல் அறிவை வழங்கியுள்ளது என நான் நம்புகிறேன். உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் மிகப்பெரிய சவால்களை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்த சவால்களை, விவாதிக்க வருமாறு ட்ரம்ப் அழைத்தார். அவரது அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு சந்தித்தேன். அப்போது, ஐ.நா. சபை அமெரிக்க தூதராக பணியாற்றுமாறு அவர் என்னை கேட்டுக்கொண்டார்'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.
அமெரிக்காவின் கவர்னர்களில், உலகளவில் மிகவும் மரியாதைக்குரிய ஒருவராகத் திகழும் நிக்கி, முதலில் தனது குடும்ப தொழில்களை கவனித்துக் கொண்டிருந்தார். கவர்னரான பின், பொருளாதார வளர்ச்சியில் அக்கறை கொண்டு, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பல உதவிகளைச் செய்துள்ளார்.
நிக்கியை ஐ.நா. தூதராக நியமித்திருப்பதன் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் அந்நாட்டு அரசியலில் பலம் பொருந்தியவர்களாக உருவெடுத்துள்ளனர். 

Comments