அமெரிக்காவை சேர்ந்த மியூச்சுவல் பண்ட் நிறுவனமான மார்கன் ஸ்டான்லி இந்திய இ-டெய்ல் நிறு வனமான பிளிப்கார்ட்டில் முதலீடு செய்திருக்கிறது. இந்த நிறுவனம் பிளிப்கார்ட் சந்தை மதிப்பை குறைத்திருக்கிறது. தொடர்ந்து ஆறாவது முறையாக இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பை மார்கன் ஸ்டான்லி குறைத்திருக்கிறது. இதன் காரணமாக பிளிப்கார்ட் நிதி திரட்டுவதில் சிரமம் இருக்க கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க பங்குச்சந்தை அமைப்புக்கு கொடுத்த தகவலின் படி பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 52.13 டாலர் என தெரிவித்திருக்கிறது. முந்தைய காலாண்டில் ஒரு பங்கு மதிப்பு 84.29 டாலர் என மார்கன் ஸ்டான்லி கணித்திருந்தது. கடந்த வருடம் ஜூன் மாதம் ஒரு பங்கு மதிப்பு 142.24 டாலர் என மார்கன் ஸ்டான்லி தெரிவித்திருந்தது. ஆனால் சந்தை மதிப்பை குறைத்ததற்கான எந்த காரணத்தையும் தெரிவிக்க வில்லை.
மார்கன் ஸ்டான்லி தவிர பிடி லிட்டி, வாலிக் உள்ளிட்ட மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களும் சந்தை மதிப்பை குறைத்திருக்கின்றன. பிளிப்கார்ட் நிறுவனம் அதிக பட்சமாக 1,520 கோடி டாலர் சந்தை மதிப்பை தொட்டது. தற்போது மார்கன் ஸ்டான்லி கணிப்புபடி அந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 554 கோடி டாலர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment