400 வயாக்ரா மாத்திரைகளை அரசுப் பணத்தில் வாங்கியதாக தென்கொரிய அதிபர் பார்க் குன் ஹை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தென்கொரிய அதிபரான பார்க் குன் ஹை என்பவர் தனது 40 ஆண்டுகால தோழியும்,தொண்டு நிறுவனங்களை நடத்தி வருபவருமான சோய் சூன் சில் என்பவருக்கு அரசின் பல்வேறு அதிகாரங்களை பயன்படுத்த அனுமதி அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.மேலும் பல தொண்டு நிறுவனங்களுக்கு வந்த பணத்தை,தன் தனிப்பட்ட செலவுகளுக்காக சோய் பயன்படுத்தியததாகவும்,நெருங்கிய தோழி என்பதால் இந்த மோசடியை தென்கொரிய அதிபர் கண்டுகொள்ளவில்லை எனவும் கூறப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தென்கொரிய அதிபர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தென்கொரிய அதிபரின் அலுவலகத்தில்,நானூறு வயாக்ரா மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.இந்த மாத்திரைகளுக்கான பணமானது,அதிபர் அலுவலகமே செலுத்தியுள்ளது.ஆனால் இந்த மாத்திரைகளில் ஒன்று கூட,தற்போது வரை பயன்படுத்தப்படவில்லை.
தென் கொரிய அதிபர் கிழக்கு ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது,அதிக உயரத்தில் விமானம் பறக்கும் போது ஏற்படும் சில உடல்நலக்குறைபாடுகளை சரிசெய்வதற்காக இந்த வயாக்ரா மாத்திரைகள் வாங்கப்பட்டதாக தென் கொரிய அதிபர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.ஆனால் மக்கள் இதை நம்புவதாக இல்லை.
இந்த வயாக்ரா விவகாரம் வெளியில் தெரிந்ததிலிருந்து தென் கொரிய மக்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.இதனால் தென்கொரிய தலைநகர் சியோலில் ,பதற்றமான சூழல் காணப்படுகிறது

Comments
Post a Comment