ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி நூதன போராட்டம்!

குடிநீர் திட்டத்தில் ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடிநீர் குழாயிடம் மனு அளிக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சீவலப்பேரியில் இருந்து கோவில்பட்டி நகருக்கு குடிநீர் கொண்டுவர 2-வது குடிநீர்திட்டப் பணிகள் 97 கோடியே, 70 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் திட்ட மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 32 கோடி ரூபாய் வரை அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசுக்கு நிதி இழப்பு செய்து, ஊழல் செய்த அரசு அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 5-வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் மற்றும் அதன் நிர்வாகி முருகன் இருவரும் கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குடிநீர் குழாயிடம் மனு அளித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments