வைகோ வரவேற்பு, திருமாவளவன் எதிர்ப்பு ஏன்? ஜி.ராமகிருஷ்ணன் பதில்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு வைகோ வரவேற்பு தெரிவித்ததும், திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்ததும் அவர்களது தனிப்பட்ட கருத்து என்று மக்கள் நலக்கூட்டணி கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி இரவு,  பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதனிடையே, மக்கள் நலக்கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ, இந்த அறிவிப்பை வரவேற்றதோடு, மோடிக்கு புகழாரம் சூட்டினார். ஆனால், மக்கள் நலக்கூட்டணி தலைவர்களில் ஒருவரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்த அறிவிப்பை எதிர்த்ததோடு, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இது குறித்து நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கறுப்புப்பண விவகாரத்தில் வைகோவின் வரவேற்பும், திருமாவளவன் எதிர்ப்பும் என்பது அவர்களின் நிலைப்பாடு என்றார். மேலும், மத்திய அரசின் அறிவிப்பால் கறுப்புப்பணத்தை ஒழிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Comments