தேசிய அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகள், கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றன. 2-வது நாளான நேற்று தமி ழகத்துக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார் திருநெல்வேலி மாவட்ட வீராங் கனை கொலேசியா (14). வள்ளியூர் அருகேயுள்ள புதியம்புத்தூரைச் சேர்ந்த இந்த மாணவியின் தந்தை ஜெபசீலன். கட்டிடத் தொழிலாளி. இவர் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தாய் புஷ்பம், பீடி சுற்றுதல், பூப்பறித்தல் உள்ளிட்ட கூலி வேலைகளுக்குச் சென்று குடும் பத்தை காத்து வருகிறார். மாண விக்கு அக்கா, தம்பி உள்ளனர்.
மாணவி கொலேசியா ‘தி இந்து’ விடம் கூறும்போது, ‘‘வடக்கன் குளம் புனித தெரசா மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறேன். தமிழகத்துக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது பெருமையாக உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்வதே எனது லட்சியம்’’ என்றார்.
டிரையத்லான் என்பது ஓட்டம், நீளம் தாண்டுல், குண்டு எறிதல் ஆகிய 3 போட்டிகளையும் உள்ளடக்கியதாகும். கொலேசியா, ஓட்டப்பந்தயத்தில் 100 மீட்டரை 13.26 விநாடியில் கடந்தும், நீளம் தாண்டுதலில் 4.95 மீட்டர் தாண்டி யும், குண்டு எறிதலில் 6.55 மீட்டர் தொலைவு எறிந்தும் 1,577 புள்ளி களுடன் தங்கப் பதக்கம் வென்றுள் ளார்
Comments
Post a Comment