ரூபாய் நோட்டுகளை ஹெலிகாப்டரில் விநியோகித்த ரிசர்வ் வங்கி


செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் ஏற்பட்டுள்ள ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டைப் போக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ரூபாய் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ள இந்த பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஜார்க்கண்ட் மாநிலம் பகோரா நகரத்தில் உள்ள வங்கி ஏடிஎம்களுக்கான ரூபாய் நோட்டுகளை ஹெலிகாப்டர் மூலம் ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்தது. பாட்னாவிலுள்ள ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு ரூபாய் நோட்டுகள் கொண்டு செல்லப்பட்டன.

Comments