கோவாவை வென்றது கொல்கத்தா

ஐஎஸ்எல் தொடரில் நேற்று கோவா வில் நடைபெற்ற ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா - எப்சி கோவா அணிகள் மோதின. 28-வது நிமிடத்தில் கொல்கத்தா முதல் கோலை அடித்தது. அபினாஸ் ருடியாஸ் உதவியுடன் இந்த கோலை ஜூவான் பெலன்கோஸா அடிக்க கொல்கத்தா முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது.
80-வது நிமிடத்தில் கோவா பதிலடி கொடுத்தது. அந்த அணியின் தேசாய் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது. ஆட்டம் டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் பியர்சன் அசத்தலாக கோல் அடிக்க கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 18 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது. 12 ஆட்டங்களில் 4-வது தோல்வியை சந்தித்த கோவா 11 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
தொடரில் இன்று இரவு 7 மணிக்கு கொச்சியில் நடைபெறும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி - எப்சி புனே சிட்டி அணிகள் மோதுகின்றன. புனே 12 ஆட்டத் தில் 4 வெற்றி, 3 டிரா, 5 தோல்வி களுடன் 15 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது. கேரளா 11 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 டிரா, 4 தோல்விகளுடன் 15 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது

Comments