
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராக இந்தியாவை சேர்ந்த நரிந்தர் பத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் 12ஆவது தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் துபாயில் நடைபெற்றது. கடும்போட்டிக்கு இடையே, அயர்லாந்தின் டேவிட் பால்பிர்னி, ஆஸ்திரேலியாவின் கென் ரீட் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி நரிந்தர் பத்ரா தேர்தலில் வெற்றி பெற்றார். கடந்த 2014ம் ஆண்டு முதல் நரிந்தர் பத்ரா, ரகசிய வாக்கெடுப்பில் 68 வாக்குகளைப் பெற்றார். சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசியாவை சேர்ந்த முதல் நிர்வாகி என்ற பெருமையையும் நரிந்தர் பத்ரா பெற்றுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு முதல் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராக லியாண்ட்ரோ நெக்ரே பதவி வகித்து வருகிறார்.
Comments
Post a Comment