உலக கிக் பாக்ஸிங் சாம்பியன் ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெற்றது. இதில் சப் ஜூனியர் பிரிவில் காஷ்மீரைச் சேர்ந்த 8 வயதே ஆன தாஜ்முல் இஸ்லாம் என்ற சிறுமி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்தவரை வீழ்த்தி தாஜ்முல் இந்த சாதனையை படைத்துள்ளார்.
சப் ஜூனியர் பிரிவு என்பது 14 வயதுக்குட்பட்டவர்கள் பங்குபெறும் போட்டி. இதில் போட்டிக்கு களமிறங்கியவர்களில் பெரும்பாலானோர் தாஜ்முல்லை விட பெரியவர்கள் என்பது தனிக்கதை. குறிப்பாக மிக சிறிய வயதில் உலக கிக் பாக்ஸிங் ( ஜூனியர் பிரிவில்) தங்கப்பதக்கம் வென்றவர் என்ற சாதனையையும் தாஜ்முல் படைத்துள்ளார். மேலும் சப் ஜூனியர் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்தியரும் தாஜ்முல்தான்.

Comments
Post a Comment