பூனைக்குள் ஆவி புகுந்தால்..?

அறிமுக இயக்குநர் சின்னாஸ் இயக்கத்தில் புதுமுகம் ராஜா, சஞ்சய் மிக்கி, ஊர்மிளா, காயத்ரி ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘மியாவ்’. பூனையின் உடம்பிற்குள்  இளம் பெண் ஒருவரின் ஆவி புகுந்து, தன்னை கொன்றவர்களை  பழி வாங்கினால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.
வழக்கமான பேய்ப்பட பாணியில் இருந்து வித்தியாசமாக முயற்சித்திருக்கும் இந்த படக்குழு, படத்தையும் எப்படி வித்தியாசமாக எடுத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments