மீனவர் தினத்தை துக்க நாளாக அனுசரித்த குமரி மீனவர்கள் : சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க எதிர்ப்பு

குமரி: உலகம் முழுவதும் இன்று சர்வதேச மீனவர் தினம் கொண்டாடப்படும் நிலையில் குமரி மீனவர்கள் இதனை துக்க நாளாக அனுசரித்து வருகின்றனர். கன்னியாகுமரி அருகேயுள்ள ஆரோக்கியபுரத்தில் மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும் கருப்பு சின்னம் அணிந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். குமரியில் இணையம் சரக்கு டெ்டக துறைமுகம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு, எதிர்ப்பை காட்டும் வகையில் துக்க தினம் அனுசரிப்பதாக மீனவர்கள் கூறினார். மீனவர்கள் தினத்தையொட்டி தேவாலயத்திற்கு சென்ற குமரி மீனவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் உள்ள 44 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை:  

Comments