தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு வருகின்ற 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் வாக்காளர்களுக்கு ரூ.2000 வீதம் பணம் விநியோகித்துக் கொண்டிருந்தார். அப்போது பறக்கும் படையினர் அவரை கைது செய்தனர். அதேபோல், பள்ளியக்கரஹாரத்தில் திமுகவை சேர்ந்த ஒருவர் ரூ.500 வீதம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரையும் பறக்கும் படையினர் கைது செய்துள்ளனர்.
Comments
Post a Comment