
பிரேசில் விமான விபத்தில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட கால்பந்து வீரர் இறப்பதற்கு முன்பு தனது மனைவியிடம் இறுதியாக பேசியுள்ளார்.
பிரேசிலின் பொலிவியாவில் இருந்து கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெடலினை நோக்கி 81 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பிரேசிலை சேர்ந்த உள்ளூர் கால்பந்து அணி வீரர்கள் பயணம் செய்தனர்.இந்த விமான விபத்தில் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.அவர்களில் மூன்று பேர் கால்பந்து வீரர்கள்.
இந்த விபத்தில் படு காயங்களுடன் மீட்கப்பட்ட சேப்கான்சே அணியின் கோல்கீப்பர் டேனிலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது தனது மனைவிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.இதுவே அவரது இறுதி உரையாடலாக அமைந்தது.காயங்களுடன் மீட்கப்பட்டவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment