மல்யுத்த வீரர் கோல்டுபர்க் கிட்டதட்ட 12 வருடங்களுக்குப் பிறகு நேற்று சண்டையிட்டார்.
கடந்த சில மாதங்களாக எதிரில் உள்ள வீரர்களைப் போட்டு புரட்டி எடுத்து, டபிள்யு.டபிள்யு.இ அரங்கையே கதிகலங்க வைத்த பிராக் லெஸ்னர்தான் கோல்டுபர்க்கை எதிர்த்து நின்றது. உண்மையில் அவர் எதிர்த்து நிற்க மட்டுமே செய்தார், அடித்தது எல்லாம் கோல்டுபர்க்தான். இந்தப் போட்டி அறிவிக்கபட்டபோதே இரு பெரும் ஜாம்பவான்கள் மோதும் இந்த போட்டி, மிகவும் கடுமையானதாக, சுவாரஸ்யமானதாக இருக்கும் என உலகம் முழுவதும் உள்ள ரெஸ்லிங் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், கோல்டுபர்க்கோ இரண்டே நிமிடத்துக்குள் பிராக் லெஸ்னரை வீழ்த்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். என்னா அடி... இரண்டே இரண்டு ஸ்பியர், ஒரே ஒரு ஜாக் ஹேமர்... பிராக் லெஸ்னர் க்ளோஸ்...
வீடியோவை காண...
Comments
Post a Comment