
தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை தமிழக அரசு கொண்டு வந்தது. அதோடு, இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% தளர்த்தி அரசாணை வெளியிட்டது.
இந்த நிலையில், தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.
Comments
Post a Comment