அன்னூர் : அன்னூர் அருகே குறுக்கிலியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி கலாமணி. கூலித்தொழிலாளர்களான இவர்களுக்கு தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பிடம் அமைக்க ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் தங்களது வீட்டிற்கு முன்புறம் உள்ள இடத்தில் செப்டிக் டேங்க் அமைக்க 3 அடி அகலத்தில் 5 அடி நீளத்தில் குழி தோண்டியுள்ளனர். அப்போது தோண்டப்பட்ட குழியில் ஓரப்பகுதியில் கடப்பாரையால் குத்தியபோது குழியின் பக்கவாட்டுபகுதியில் சுவர் போல் இடிந்து விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் பக்கவாட்டில் உடைத்து பார்த்தபோது உள்ளே சுமார் 6 அடி அகலம், 6 அடி நீளம், 6 அடி ஆழம் அளவில் சுற்றிலும் சுண்ணாம்பு சுவர் அமைக்கப்பட்டும் மேற்பகுதி கருங்கல் வைத்து மூடப்பட்டும் ஒரு ரகசிய அறை இருந்துள்ளது.
இந்த நிலவறையின் கருங்கல் மூடியானது நிலத்தில் இருந்து மூன்று அடி ஆழத்தில் இருந்தது. இதுகுறி–்த்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘அறை போன்ற அமைப்பு கொண்ட இந்த குழியை பழங்காலத்தில் தானியங்களை சேமித்து வைப்பதற்காக அமைத்திருப்பார்கள். இதனை ‘சோளக்குழி’ என அழைப்பார்கள், என்றனர். இது பற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் தொல் பொருள் ஆய்வாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னரே அந்த நிலவறை எக்காலத்தில் அமைக்கப்பட்டது என்ற விபரம் தெரியவரும்

Comments
Post a Comment