டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஷீலா தீட்சித்தின் மகள் லத்திகா. இவரின் கணவர் இம்ரான். கருத்துவேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் கடந்த 10 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட் களுக்கு முன்பு, பெங்களூருவில் இம்ரானை போலீஸார் கைது செய்தனர். டெல்லி பரகம்பா போலீஸ் நிலையத்தில் லத்திகா அளித்த புகாரின் பேரில், குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் இம்ரானை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
நீதிமன்ற அனுமதியுடன் பெங்க ளூருவில் இருந்து டெல்லிக்கு விசாரணைக்காக இம்ரான் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்
Comments
Post a Comment