விராட் கோலி இந்த ஆண்டு இதுவரை 2 இரட்டை சதம் அடித்துள்ளார். வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக ஜூலை மாதம் நடந்த டெஸ்டில் 200 ரன் எடுத்தார். இது அவரது முதல் இரட்டை சதமாகும். நியூசிலாந்துக்கு எதிரான அக்டோபர் மாதம் இந்தூரில் நடந்த டெஸ்ட்டில் 211 ரன் எடுத்து இருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நேற்று 151 ரன் எடுத்த விராட் கோலி இன்று இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 167 ரன்னில் அவுட் ஆனார். அவர் இரட்டை சதம் அடித்து இருந்தால் ஒரே ஆண்டில் 3 இரட்டை சதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை படைத்து இருப்பார்.
Comments
Post a Comment