ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிரான வழக்கு விசாரணை : டிசம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்





Replay
Know More

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது விலங்குகளை கொடுமைபடுத்துவது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அப்போது பால் கறப்பது கூட பசுவை கொடுமைபடுத்தும் செயல்தான் என்று மத்திய அரசு வழக்கறிஞர் வாதம் செய்தார். 

காட்டு விலங்கை உயிரியல் பூங்காவில் அடைப்பதும் துன்புறுத்தும் செயல் என்றும், குதிரை பந்தையம் நடத்துவது கூட கொடுமை படுத்தும் செயல்தான் என்று தமிழக அரசு வழக்கறிஞர் வாதம் செய்தார். காலம் காலமாக நடைபெறும் ஜல்லிக்கட்டை உடனே நிறுத்த முடியாது என்று மத்திய அரசு வழக்கறிஞர் வாதம் செய்தார். 

மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மீறவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவுடன் சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது என்று மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்

Comments