அந்தமானில் கனத்த மழை: 800 சுற்றுலாப்பயணிகள் தவிப்பு


போர்ட்பிளேர்,

அந்தமான் தீவுகளில் கனத்த மழை பெய்து வருகிறது. பலத்த புயல் காற்றும் வீசி வருகிறது. இந்த  கனத்த மழை மற்றும் புயலில் அந்தமானுக்கு சுற்றுலா சென்ற பயணிகளின் படகு ஒன்று சிக்கியுள்ளது. சுமார் 800 சுற்றுலாப்பயணிகள் தத்தளிப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து மீட்பு பணிக்கு கடற்படையினர் விரைந்துள்ளனர். சுற்றுலாப்பயணிகள் சிக்கி தவித்து வரும் ஹேவ்லாக் தீவுக்கு கடற்படையின் பித்ரா, பங்காராம், கும்பிர் ஆகிய  கப்பல்கள் விரைந்துள்ளன.

அந்தமான் தீவுகளில் உள்ள கடற்கரைகள் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. ஹேவ்லாக் தீவும் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குகிறது. அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் இந்த ஹேவ்லேக் உள்ளது

Comments