5 மாவட்டங்களில் உஷார் நிலை: பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள் ளது. அதற்கு ‘நாடா’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை உட்பட 4 மாவட்ட பள்ளி களுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு அதிக மழை தரக் கூடிய வடகிழக்கு பருவமழை, இந்த ஆண்டு தாமதமாக கடந்த அக்டோபர் இறுதியில் தொடங் கியது. நவம்பரில் சராசரியாக 32 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 10 செ.மீ. மழை மட்டுமே பெய்தது. இந்நிலையில் தற்போது வங்கக் கடலில் உருவாகி யுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தென்மேற்கு வங்கக் கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருந்தது. அது தொடர்ந்து வலுப்பெற்று இன்று (புதன்கிழமை) காலை புயலாக மாறியுள்ளது. அதற்கு ‘நாடா’ என்று பெயரிடப்பட்டுள் ளது. தற்போது அந்தப் புயல் சின்னம், புதுச்சேரிக்கு தென் கிழக்கே சுமார் 670 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது மேலும் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன்காரண மாக நாளை (இன்று) அதிகாலை முதல் தமிழக கடலோரப் பகுதிகளில் மிதமான மழையாக தொடங்கி, பின்னர் கனமழையாக பெய்யும்.
‘நாடா’ புயல் 2-ம் தேதி அதிகாலை புதுச்சேரி - வேதாரண் யம் இடையே கடலூர் அருகில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும். பிறகு படிப்படியாக உள்மாவட்டங்களில் மழை அதிகரிக்கும்.
புயல் எச்சரிக்கை கூண்டுகள்
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், எண்ணூர், காரைக்கால், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது.
இதுவரை கிடைத்த வானிலை தகவல்களின் அடிப்படையில், சென்னையில் கனமழை பெய்யும். ஆனால், கடந்த ஆண்டைப்போல அதிகனமழை பெய்ய வாய்ப் பில்லை. இவ்வாறு பாலசந்திரன் கூறினார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் பள்ளி களுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப் பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறும்போது, ‘‘வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நாடா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப் பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் டிசம்பர் 1, 2 ஆகிய 2 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. விழுப் புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியை ஒட்டியுள்ள மரக்காணம், வானூர் ஆகிய 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை விடப் படுகிறது’’ என்றார்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது: ‘புயல் உருவாகியிருப் பதைத் தொடர்ந்து, முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கு மாறு அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப் புள்ள பகுதிகளில் வசிப்போரை அப்புறப்படுத்தி, நிவாரண மையங் களில் தங்க வைக்க உரிய ஏற்பாடுகளை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர நிலை ஏற்படும்போது 1070, 1077 ஆகிய இலவச தொலைபேசி எண்களை பொது மக்கள் தொடர்புகொள்ளலாம். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். அவர்களின் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டும். ஆட்சியர் அறிவுறுத்தல்படி, பொது மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருக்க வேண்டும்.
இரு தேசிய பேரிடர் மீட்புப் படை, ஒரு மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை கடலூர், சென்னை, நாகப்பட்டினம் ஆகிய 3 இடங்களில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஓமன் சூட்டிய ‘நாடா’ பெயர்
சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து புயலுக்கு பெயர் வைக்கும் முறையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த நவம்பரில் உருவான புயலுக்கு ‘கியாந்த்’ என மியான்மர் நாடு பெயரிட்டது. தற்போது உருவாகி யுள்ள புயலுக்கு ‘நாடா’ என்ற பெயரை ஓமன் சூட்டியுள்ளது. நாடா என்பதற்கு ஓமன் மொழியில்
‘பெருந்தன்மை’ என்று பொருளாம் அடுத்த புயலுக்கு ‘வர்தா’ என பாகிஸ்தான் பெயர் சூட்டும்
Comments
Post a Comment