நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது என்றும் பெங்களூருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை மணமகனாக பெற்றோர்கள் தேர்வு செய்துள்ளனர் என்றும் தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.
நடிகை அனுஷ்காவுக்கு 35 வயது ஆகிறது. 2005-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இரு மொழிகளிலும் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார். சம்பளம் ரூ.2½ கோடி கேட்கிறார். வயதானதால் இளம் நடிகர்களுடன் அவரால் ஜோடியாக நடிக்க முடியவில்லை. இதனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.
அனுஷ்காவை பல கதாநாயகர்களுடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. நடிகர்கள் ஆர்யா, நாகார்ஜுனா ஆகியோருடன் இணைத்து பேசப்பட்டார். ஆந்திராவில் உள்ள வயதான தொழில் அதிபர் ஒருவரை மணக்கப்போகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்தநிலையில் தற்போது அவரது பெற்றோர்கள் பெங்களூருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ஒருவரை மணமகனாக தேர்வு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது.
திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விட அனுஷ்கா திட்டமிட்டு உள்ளார். தற்போது அவரது கைவசம் சி-3, பாகுபலி-2, பாக்மதி, ஓம் நமோ வெங்கடேசாய ஆகிய 4 படங்கள் உள்ளன. திருமணத்துக்கு முன்பு இந்த படங்களை முடித்து கொடுத்து விட முடிவு செய்துள்ளார். வேறு புதிய படங்களில் அவர் ஒப்பந்தமாகவில்லை
Comments
Post a Comment