Skip to main content

வலுவிழந்த நிலையில் காரைக்கால் அருகே கரையைக் கடந்தது 'நாடா'


வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'நாடா' புயல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வலுவிழந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காரைக்கால் அருகே கரையைக் கடந்தது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன், "வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'நாடா' காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்கு இடைப்பட்ட வேளையில் வலுவிழந்த நிலையில் காரைக்கால் அருகே கரையைக் கடந்தது.
தற்போது நாகப்பட்டினத்துக்கு மேற்கே காற்றழுத்த தாழ்வாக நிலை கொண்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
மீனவர்கள் இன்று மாலை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். அடுத்த 12 மணி நேரத்துக்கு பலத்த காற்று வீசும்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 11 செ.மீ மழை பெய்துள்ளது. செங்குன்றம், சோழவரத்தில் தலா 6 செ.மீ. மழையும், முத்துப்பேட்டையில் 5 செ.மீ மழையும் பெய்துள்ளது.
தற்போது காற்றழுத்த தாழ்வாக நிலை கொண்டுள்ள 'நாடா' இன்று மாலைக்குள் மேலும் வலுவிழந்து தாழ்வு பகுதியாக மாறும்" என்றார்

Comments