சச்சினின் சுயசரிதை ‘Playing it my Way’ என்ற பெயரில் 2014-ம் ஆண்டு வெளியானது. இந்த புத்தகம் ஏற்கெனவே விற்பனையில் உலக சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இப்புத்தகம் மேலும் ஒரு சாதனை படைத்திருக்கிறது. 14-வது ரேமண்ட் குறுக்கெழுத்து புத்தக விருதில், சுயசரிதை பிரிவில் ஆண்டின் சிறந்த புத்தமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சச்சினின் சுயசரிதை. இது குறித்து சச்சின் ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸிலும், ரசிகர்கள் எனக்கு ஆதரவளித்து வருகின்றனர். விலை மதிக்க முடியாத அந்த அன்புக்கு நன்றி என்ற ஒரு வரியில் பதில் அளித்து விட முடியாது. இந்த புத்தகத்தின் வெளியீட்டாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்
Comments
Post a Comment