சென்னை: ஜெயலலிதா என்னும் ஆளுமை நிறைந்த பெண்மணி, இனி அ.தி.மு.க.,வுக்கு இல்லை. அதனால், அவர் வகித்து வந்த கட்சியின் பொது செயலர் பதவியை யார் வகிக்கப் போகிறார்கள் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.
இத்தனைப் பெரிய பதவியைப் பிடிக்க, கட்சிக்குள் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது என்பதுதான், அ.தி.மு.க., வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள லேட்டஸ்ட் செய்தி. கட்சியின் பொதுச் செயலர் பதவியைப் பிடிக்க, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஆசைப்படுவதாகவும், அதே நேரம், அந்த பொறுப்புக்கு வர, பார்லிமெண்ட்டின் துணை சபாநாயகர் தம்பிதுரை விரும்புவதாகவும் கட்சித் தரப்பில் இருந்து செய்திகள் கசிகின்றன.
இத்தனைப் பெரிய பதவியைப் பிடிக்க, கட்சிக்குள் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது என்பதுதான், அ.தி.மு.க., வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள லேட்டஸ்ட் செய்தி. கட்சியின் பொதுச் செயலர் பதவியைப் பிடிக்க, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஆசைப்படுவதாகவும், அதே நேரம், அந்த பொறுப்புக்கு வர, பார்லிமெண்ட்டின் துணை சபாநாயகர் தம்பிதுரை விரும்புவதாகவும் கட்சித் தரப்பில் இருந்து செய்திகள் கசிகின்றன.
நீயா நானா?
இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது; முதல்வராகவும்; அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராகவும் இருந்த ஜெயலலிதா, இறந்ததும், கட்சியின் பொது செயலர் பொறுப்பில் அமர்வதற்கு, ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் மக்களவை சபாநாயகர் தம்பிதுரை இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா வகித்து வந்த முதல்வர் பதவியை, யாரிடம் ஒப்படைப்பது என்பதிலேயே, பிரச்னை துவங்கி விட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை நியமிக்க வேண்டும் என, கட்சியில் ஒரு தரப்பினர் விருப்பப்பட, சசிகலா தரப்பினரோ, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அந்த வாய்ப்பை வழங்கலாம் என விரும்பினார். ஆனால், கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்களின் சாய்ஸ் ஓ.பன்னீர்செல்வம் என்பதால், சசிகலாவால், பன்னீர்செல்வத்தை தவிர்க்க முடியவில்லை. இப்படி முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் பிடித்ததும், கட்சியின் பொதுச் செயலர் பொறுப்பு மீது, சசிகலாவின் பார்வை முழுமையாக பதிந்துள்ளது.
யாருக்கு?:
இதிலும் குறுக்கீடுகள் அதிகமாக இருக்கின்றன. கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர்கள், இந்தப் பொறுப்பிற்கு, தங்கள் இனத்தைச் சேர்ந்தவரான தம்பிதுரை வர வேண்டும் என விரும்புகின்றனர். தேவர் இனத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு, முதல்வர் பதவியை வழங்கிய பின், அதே இனத்தைச் சேர்ந்த சசிகலாவுக்கு, கட்சியின் பொது செயலர் பொறுப்பை வழங்கினால், கட்சியும்; ஆட்சியும் ஒரு இனத்தை சேர்ந்தவர்களுக்கே போய்விடும் என, சிலர் ஆதங்கப்படுகின்றனர்.
பாஜ ஆதரவு:
இதற்கிடையே, தம்பிதுரையே அ.தி.மு.க., பொது செயலராக வர வேண்டும் என, பா.ஜ., தரப்பும் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்தப் போட்டியில், தனக்கு கட்சியினர் சாதகமாக இல்லாமல் போகும்பட்சத்தில், தம்பிதுரைக்கு மாற்றாக, தன் ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை கொண்டு வரலாம் எனவும், சசிகலா திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. செங்கோட்டையனுக்கு அந்த வாய்ப்பு கிட்டினால்கூட, சந்தோஷப்படத்தான் செய்வோம் என்று சொல்கிறது ஒரு தரப்பு. இந்த விஷயத்தில், நாங்கள் மட்டும் இளைத்தவர்களா என, நாடார் இனத்தை சேர்ந்தவர்களும்; வன்னிய இனத்தை சேர்ந்தவர்களும் மல்லுகட்டத் துவங்கி உள்ளனர். இதனால், சசிகலா தரப்பு நிலை குலைந்து போய் இருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் கட்சியின் பொதுக் குழுவைக் கூட்டி, தன்னை பொது செயலராக அறிவித்து, கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டலாம் என கணக்குப் போட்டு வைத்திருந்த சசிகலாவின் எண்ணத்தில் தற்போது சலனம் ஏற்பட்டுள்ளதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதா என்ற ஆளுமை மிக்க ஒரு சக்தி இல்லாத நிலையில், அவருடைய தோழி என்ற அடையாளம் மட்டுமே சசிகலா நினைப்பதை கட்சிக்குள் எளிமையாக சாதிக்க முடியாது என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தனைத் தடைகளையும் மீறி சசிகலா, பொது செயலர் பதவியை அடைவது, அவ்வளவு சுலபம் அல்ல என்பதுதான் நிலைமை. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
Comments
Post a Comment