“மங்காத்தா படத்தை சுட்டது இந்த படத்தில் இருந்து தான்”! : வெங்கட் பிரபு ஓபன் டாக்




அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மிகவும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருந்த மங்காத்தா ஹாலிவுட் படத்தின் காப்பி என்று ரசிகர்களால் கூறப்பட்டது. அதற்கு தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார். மங்காத்தா படத்தை நான் அதற்கு முன்னர் இயக்கிய சரோஜா படத்தில் இருந்து தான் காப்பி அடித்தேன். அதில் வரும் ஜெயராம், சம்பத் கேரக்டர்கள் தான் அர்ஜூன் மற்றும் அஜீத் கேரக்டர்கள்.

ஜெயராம் போல் காவல்துறையில் அர்ஜூனும், சம்பத் போல் சஸ்பெண்ட் ஆன காவல் அதிகாரியாக அஜீத்தும் நடித்திருப்பார்கள். அப்படி உல்டா செய்து மங்காத்தா படத்தை எடுத்தேன் என்று வெங்கட் பிரபு கூறி இருக்கிறார்.

Comments