கிரிக்கெட்: விக்கேட் கீப்பரை பேட்டால் தாக்க முயன்ற வங்காள தேச வீரருக்கு எச்சரிக்கை


இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போல் வங்காள தேசத்தில் பி.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில்  வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் எதிரணி விக்கெட் கீப்பரை பேட்டால் அடிக்க முயன்றதால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஆண்டிற்கான தொடரில் ரங்க்பூர் ரைடர்ஸ் அணியும் ராஜ்ஷகி கிங்ஸ் அணியும்   மோதிய போட்டியின் போது

ராஜ்ஷகி அணியின்  பேட்ஸ்மேனாக களத்தில் இருந்த சபீர்ரஹ்மான் திடீரென்று எதிரணியின் விக்கெட் கீப்பரும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவருமான மொகமத் சாசாத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தின் போது திடீரென சபீர் ரஹ்மான் தான் கையில் வைத்திருந்த பேட்டை சாகாத்தை அடிப்பது போல் உயர்த்தினார். சக வீரர்கள் வந்து சபீர் ரஹ்மான தடுத்தனர். இதனால் போட்டியின் போது பரபரப்பு ஏற்பட்டது.இதை தொடர்ந்து  வங்காள தேஷ கிரிகெட் நிர்வாகம் ரஹ்மானுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    BPL fight : Did't the Bangladesh management warn Sabbir to watch his behaviour? @Isam84 #BPL pic.twitter.com/C4CmUN5wpM
    — Daniel Alexander (@daniel86cricket) November 29, 2016

முன்னதாக சபீர் ரஹ்மான் ஓட்டல் அறையில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கூறி அவருக்கு பி.சி.பி கடும் அபாரதம் விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது

Comments