ஜியோ விளம்பரத்துக்கு அனுமதி வழங்கவில்லை!

ஜியோ நிறுவனம் என்ட்ரி கொடுத்தவுடன், நாளிதழ்களுக்கு ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டது. அதில் மோடியின் படமும் இணைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம், தொடர்பாக சமாஜ்வாடி உறுப்பினர் நீரஜ் ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த, தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், 'ஜியோ நிறுவனம் விளம்பரம் கொடுத்ததை நாங்களும் கண்டோம். ஆனால் அதில் பிரதமரின் படம் வைக்க, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு, பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கவில்லை' என்றார்

Comments