யுவராஜ் திருமணமாகி ஒரு நாளே ஆன நிலையில் தம்பதிகளுக்கு முன்னாள் அண்ணி எச்சரிக்கை

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா சமீபத்தில் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது  என் மாமியார் எனக்கு தொல்லை கொடுத்து வந்தார். நான் என் கணவருடன் தேன்நிலவுக்கு சென்ற போது கூட யுவராஜின் மொத்த குடும்பமும் எங்களுடன் வந்து எங்கள் தனிமையை கெடுத்தார்கள்.

என்னை கர்ப்பமடையுமாறு என் மாமியார் தொடர்ந்து வலியுறுத்தியதால் நான் திருமணம் ஆன நான்கே மாதங்களில் என் கணவரை விட்டு பிரிந்து என் தாய் வீட்டுக்கு வந்து விட்டேன் என கூறி பரபர்ப்பை ஏற்படுத்தினார்.இவர் யுவராஜ் தம்பியை 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

தற்போது யுவராஜ் மாடல் அழகியும் இந்தி நடிகையுமான 29 வயதான ஹாசல் கீச்சை  திருமணம் செய்து உள்ளார். இவர்கள் திருமணம் முடிந்து  இரண்டு நாட்களே ஆன நிலையில் அவர்களது திருமண புகைப்படம் ஒன்றை யுவராஜ்  தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார். அதற்கு ஆகான்ஷா அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய தம்பதி ஷப்னமின் (முன்னாள் மாமியார்) தலையீடு இல்லாமல் தனியாக வாழ பிரார்த்திக்கிறேன். ஹாசல் மிகவும் அதிர்ஷ்டசாலி அவர் யுவராஜையை திருமணம் செய்திருக்கிறார். காரணம் அவர் மிகவும் நல்ல மனிதர். என்னுடைய கணவர் போல் அல்லாமல், அவர் தன் தாயின் தலையீடு இல்லாமல் அனைத்தையும் முடிவு செய்வார். மேலும் அவர் மூன்று நாட்களுக்கு மேல் டெல்லியில் தங்கமாட்டார் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்

Comments