புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்




சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் ஓருசில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை மைய அதிகாரி கூறியுள்ளார். நடா புயல் கரையை கடந்ததை அடுத்து தீவிர காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியுள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.  மாலை அல்லது இரவு நேரங்களில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவி்த்துள்ளது.

டிசம்பர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் தென்கிழக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பெரும்பாலான இடங்ளகில் பலத்த மழை பெய்து வருகிறது

Comments