அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூடுகிறது பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா முன் நிறுத்தப்படுவார்




சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வும் இருந்தார்.அவரது மறைவை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் பதவி தற்போது காலியாக உள்ளது.

இதனால் கட்சியை வழி நடத்தி செல்ல பொதுச்செய லாளர் பதவி நிரப்பப்பட வேண்டும்.இந்த பதவியில் ஜெய லலிதாவின் தோழி சசிகலா நியமிக்கப்படலாம்  என்று பரபரப்பாக பேசப்படுகிறது.இதற்காக இந்த மாதம் 20-ந்தேதிக்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டத்தில் புதிய பொதுச்செயலாளர் நியமனத்துக்கு ஒப்புதல் பெறப் படும் என்று தெரிகிறது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து இக்கட்டான சூழநிலையில் கட்சி உள்ள தால் கட்சியை வழி நடத்தி செல்லும் வகையில் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா முன் நிறுத்தப்படுவார் என பரபரப்பாக பேசப்படுகிறது.வழக்கமாக அங்கீகரிக்கப் பட்ட தேசிய கட்சிகள் ஆண்டுக்கு   ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை  செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்று விதி உள்ளது.

அந்த வகையில் கடந்த ஜுன் மாதம் 18-ந்தேதி அ.தி. மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த சூழலில் இப்போது பொதுச்செயலாளர் பதவிக்கு ஒப்புதல் பெற பொதுக் குழு, செயற்குழு கூட்டம் மீண்டும் நடத்தப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அ.தி.மு.க. செயற்குழுவில் தலைமைக் கழக நிர்வாகிகள் 38 பேர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 270 பேர் உள்ளனர்.இதே போல் பொதுக்குழு வில் 3 ஆயிரத்து 300 பேர் வரை இருப்பார்கள். இவர்கள் அனைவரும் பொதுச்செயலாளர் நிய மனத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

Comments