தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய புத்தாண்டு கொண்டாட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இதன்படி மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் முகக்கவசம், சமூக இடைவெளி இவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
உலகின் மற்ற நாடுகளில் கொரோனா குறித்து தமிழகத்தில் அச்சம் கொள்ள தேவையில்லை பாதுகாப்பான புத்தாண்டை வரவேற்போம் எனத் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல சென்னை பெருநகர மாநகராட்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.இதன் பிறகு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் புத்தாண்டு கொண்டாட்டத்தை திட்டமிட வேண்டும். பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை டிசம்பர் 31ம் தேதி சனிக்கிழமை இரவு 08.00 மணிக்கு மேல் கடற்கரை மணல் பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உட்பட அனைத்து கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட அனுமதி கிடையாது. ஆகவே, பொதுமக்கள் 31.12.2022 அன்று இரவு 08.00 மணிக்கு மேல் கடற்கரை மணற்பகுதிக்கு வரவேண்டாம் எனவும், பாதுகாப்பை கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் பெருநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Comments
Post a Comment