சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் வாரிக்குவித்த சாதனைகளின் பட்டியல்

 சூர்யகுமார் யாதவின் சாதனைகள்:



1. 2023ம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்த வீரர்.


2. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 843 பந்தில் 1500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ், அதிவிரைவில் 1500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.


3. சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3வது சதத்தை விளாசி, டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார். ரோஹித் சர்மா 4 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். 3 சதங்களுடன் சூர்யகுமார் யாதவ் 3 சதங்களுடன் 2வது இடத்தை சில வீரர்களுடன் பகிர்ந்துள்ளார். சூர்யகுமார் விரைவில் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிடுவார்.


4. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 43 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் மற்றும் 14 அரைசதங்களை விளாசியுள்ளார்.

Comments