இன்று இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் வாரிசு படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் இந்த விமர்சனத்தில் காட்டமாக தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். ஒரு வசதியான குடும்பத்தில் கடைசி பையனாக பிறந்திருக்கிறார் ஹீரோ. அவருக்கும் அவரது தந்தைக்கும் எப்பொழுதும் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் ஹீரோ வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தந்தையின் 60-வது கல்யாணத்திற்கு ஹீரோ வருகிறார். அப்போது அவரிடம் அவருடைய தந்தை நமது குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருக்கிறது அதை நீதான் எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். அதை விஜய் எப்படி சரி செய்தார் என்பது குறித்த கதை தான் வாரிசு திரைப்படம். இந்த படத்தை பொறுத்தவரை குடும்ப படமா? அல்லது மசாலா படமா என்ற குழப்பம் படம் எடுத்தவர்களுக்கே இருக்கிறது என்று ப்ளூ சட்டை தனது விமர்சனத்தை தொடங்கினார்.
இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது எந்த ஒரு இடத்திலும் எமோஷனல் கனெக்ஷன் எதுவுமே இல்லை. வில்லன் மிகுந்த மொக்கையாக இருக்கிறார். அவரை அடித்தால் என்ன அடிக்காவிட்டால் என்பது போல மிகுந்த மொக்கையான ஒரு வில்லனாக இருக்கிறார். முதல் பாகத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே லேசாக தொண்டையை கவ்வியது. இருந்த போதிலும் இரண்டாவது பாகத்தில் தூக்கி நிறுத்துவார்கள் என்று நினைத்தால் அது தவறாகிவிட்டது. வில்லன் உன்னுடைய ஷேர்களை எழுதி வாங்கிவிடுவேன் பார் என்று கூறுகிறார். இந்த காலத்தில் வந்து யாராவது ஷேர்களை எழுதி வாங்க முடியுமா? இப்படியே படம் எடுத்துக் கொண்டிருந்தால் நாடு வல்லரசு ஆகாது டல்லரசு தான் ஆகும். மேலும் ஹீரோ அறிமுக சீன்களில் கிரீன் மேட்டை பயன்படுத்தி சீன்களை எடுத்து இருக்கிறார்கள். அதுவும் கூட பரவாயில்லை. வீடுகளில் பேசிக் கொண்டிருக்கும் காட்சிகளை கூட கிரீன் மேட் யூஸ் பண்ணி இருக்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னர் எம்ஜிஆர் படங்களில் உபயோகப்படுத்திய தொழில்நுட்பத்தை கூட இந்த படத்தில் பயன்படுத்தவில்லை.
ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லாதது என்பது போல இந்த படத்திற்கு ஹீரோயின் தேவையே இல்லை. மேலும் ஹீரோ வில்லனுக்கு அறிவுரை கூறுகிறார். உடனே வில்லன் மனம் திருந்தி விடுகிறார். பீஸ்ட் படங்களில் கூட பாட்டு டான்ஸ் எல்லா நன்றாக இருந்தது. இதில் ஒன்று கூட நல்லா இல்லை. மேலும் விசேஷ வீட்டுக்குள் நுழைந்தபோல் எப்பொழுதும் பரபரப்பாகவே இருக்கிறார்கள். படம் முழுவதும் செயற்கையாக இருந்தது. வீட்டிற்குள் வேலை செய்யும் ஆயா கூட முழு மேக்கப்புடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். இது மெகா சீரியல் என்று சொல்வதைவிட ஹிந்தி சீரியலை டப்பிங் செய்து எடுக்கப்பட்ட மெகா சீரியல் போல இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் தனது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். அவரின் முழு வீடியோவை நீங்களும் காண..!
Comments
Post a Comment