#பரபரப்பு பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர் பலி பெரும் சோகத்தை ஏற்படுத்திய பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் அரவிந்த் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு பாலமேடை சேர்ந்த அரவிந்த்ராஜ் என்ற இளைஞர் மாடுபிடி வீரராக களம் இறக்கப்பட்டார். இவர் தான் களமிறங்கியது முதல் 9 காலைகளை மடக்கி பிடித்து பல்வேறு பரிசுகளை பெற்றார். மேலும் சிறந்த மாடுபிடி வீரர் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடைசியாக அவர் பிடித்த மாடு அவரது வயிற்றில் குத்தியதில் குடல் சரிந்து நிலை குலைந்தால் அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலமேட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. தற்பொழுது உயிரிழந்த சம்பவம் பாலமேடு ஜல்லிக்கட்டில் பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Comments
Post a Comment