குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்.!

 குடியரசு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொது அரசு விடுமுறை தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம்.

அதன்படி நாளை (ஜனவரி 26) குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை சட்டவிரோதமாக மது விற்பனை செய்தாலோ, மதுக்கடைகள், விற்பனைக் கூடங்களை திறந்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது

Comments