இணையத்தில் வைரலாகும் ஒரு நகைச்சுவை கடவுளிடம் பணம் வேண்டி சிறுவன் எழுதிய கடிதம்.

 இணையத்தில் உலாவரும் ஒரு நகைச்சுவை கதை இது 

அமெரிக்க சிறுவன் ஒருவன் பயங்கரமான பணக்கஷ்டம் அவனுக்கு 50 டாலர் தேவைப்பட்டது.



கடவுளிடம் வெகு நாட்களாக வேண்டிப் பார்த்தான் ஒன்னுக்கும் வேலையாகவில்லை கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான்.

உரைமேல் கடவுள் அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான்.

பணம் பட்டுவாடா செய்ய வேண்டிய தபால் அதிகாரிகள் இக்கடிதத்தை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்!!

அந்த கடிதத்தை ஒரு விளையாட்டாக வெள்ளை மலைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிபருக்கு ஒரே ஆச்சரியம் சரி இந்தப் பையனுக்கு உதவுவோம், ஆனால் ஒரு சிறு பையனுக்கு 50 டாலர் என்பது அதிகம் எனவே 20 டாலர் மட்டும் அனுப்புவோம் என்று அனுப்பி வைத்தார் .

பணம் கிடைத்தவுடன் பையனுக்கு குஷி தாளவில்லை.

நன்றி தெரிவித்து கடவுளுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினான், ரொம்ப நன்றி கடவுளே🙏🙏 நான் கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சிட்டீங்க ஆனாலும் நீங்க அமெரிக்க ஜனாதிபதி ஆபீஸ் மூலமாக பணம் அனுப்புனத நான் கவரைப் பார்த்து தெரிஞ்சுகிட்டேன்.

தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க நீங்க அனுப்புன காசுல பாதியா அவங்க திருடிட்டாங்க.

Comments