100 கோடி அபேஸ்…. “செய்கூலி இல்ல, சேதாரம் இல்ல”….. பிரகாஷ்ராஜ், ராதிகாவின் கவர்ச்சி விளம்பரத்தால் கண்ணீர் வடிக்கும் மக்கள்….!!!!

திருச்சி கரூர் சாலையில் பிரணவ் ஜுவல்லரி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நகைகளை கவர்ச்சியான விளம்பரம் கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளது. இந்த நகைக்கடை சார்பில் ஜீரோ சதவீதம் செய்கூலி, சேதாரம் கிடையாது. தங்களிடம் தங்க நகை வாங்கினால் சவரனுக்கு 4000 ரூபாய் வரை சேமிக்கலாம் என கவர்ச்சியான விளம்பரங்களை வெளியிட்டு இருந்தது.


இந்த விளம்பரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், ராதிகா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். இதனை நம்பி திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் தங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை மாதந்தோறும் இந்த ஜுவல்லரியில் நகை சீட்டாக கட்டி வந்தார்கள். 500 ரூபாயில் தொடங்கில் லட்சக்கணக்கில் நகை சீட்டுகள் கட்டப்பட்டிருந்தது.
அது மட்டும் இல்லாமல் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஆறு மாதத்தில் உங்களுக்கு அவ்வளவு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தையை கூறி மொத்த பணத்தையும் அபேஸ் செய்து சென்று விட்டனர் ஜுவல்லரி முதலாளிகள். இதனால் பணத்தை போட்ட மொத்த மக்களும் கண்ணீர் வடித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Comments

Post a Comment