உலக கோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவு: ஹர்திக் பாண்டியா திடீர் காயம் .அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இதன்பின்னர், ஹர்திக் வலியில் நெளிந்ததால் இந்தியாவின் பிசியோ வரவழைக்கப்பட்டார். ஹர்திக்கை சோதித்த அவர் ஸ்கேன் எடுக்க அறிவுறுத்தினார். பின்னர் உடனடியாக ஹர்திக் மைதானத்தில் இருந்து வெளியேறினார். தற்போது அவர் ஸ்கேன் எடுக்க அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயத்தின் தீவிரம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இதுவரை எந்த கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும், வங்கதேச அணிக்கு எதிரான இன்னிங்ஸ் முழுவதும் ஹர்திக் பீல்டிங் செய்ய மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது உள் காயம் என்பதால் 120 நிமிடங்களுக்குப் பிறகு அல்லது 5 விக்கெட்டுகள் விழுந்த பிறகு அவரால் பேட்டிங் செய்ய முடியும். அந்த முடிவை அணி நிர்வாகம் தான் எடுக்கும்.
2019 உலகக் கோப்பைக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா முதுகில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டும் வந்த பிறகும் அவர் ஆரம்பத்தில் பந்து வீசவில்லை. பின்னர் சில ஓவர்கள் மட்டுமே பந்துவீசினார். இந்த ஆண்டு ஐ.பி.எல்-லின் போது ஹர்திக் 16 ஆட்டங்களில் 25 ஓவர்கள் வீசி இருந்தார்
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை நடந்த 3 ஆட்டங்களில், ஹர்திக் பாண்டியா பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகள் உட்பட 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஹர்திக் வீசிய ஓவரில் 3 பந்துகள் மீதமிருந்த நிலையில், அதனை விராட் கோலி வீசினார். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தார்கள்.
Comments
Post a Comment